கலாசாரத்துறை அமைச்சகம்
உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் ஜூலை 21 அன்று பாரத மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்
உலக பாரம்பரியக் குழு கூட்டத்தை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது
இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்
Posted On:
20 JUL 2024 7:44PM by PIB Chennai
உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி , ஜூலை 21 அன்று மாலை 7 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். யுனெஸ்கோ தலைமை இயக்குநர் திருமதி ஆட்ரி அசௌலே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்தியா முதல் முறையாக உலக பாரம்பரியக் குழு கூட்டத்தை நடத்துகிறது. இது ஜூலை 21 முதல் 31 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும். உலக பாரம்பரியக் குழு ஆண்டுக்கு ஒரு முறை கூடுகிறது. உலக பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிப்பதற்கும், உலக பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும் இது நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் புதிய இடங்களை நியமித்தல், தற்போதுள்ள 124 உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு நிலை அறிக்கைகள், பன்னாட்டு உதவி, உலக பாரம்பரிய நிதியின் பயன்பாடு போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்துடன், உலக பாரம்பரிய இளம் வல்லுநர்கள் மன்றம் மற்றும் உலக பாரம்பரிய தள மேலாளர்கள் மன்றம் ஆகியவையும் நடைபெறுகின்றன.
மேலும், பாரத மண்டபத்தில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் அமைக்கப்படும். மீட்கப்பட்ட சில கலைப்பொருட்கள் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டதை திருப்பிக் கொண்டுவரப்பட்ட பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தும். இதுவரை 350-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ராணி கி வாவ், படான், குஜராத்; கைலாசா கோயில், எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா; ஹொய்சள கோயில், ஹலேபீடு, கர்நாடகா ஆகிய இந்தியாவின் 3 உலக பாரம்பரிய தளங்களுக்கு அதிவேக அனுபவம் வழங்கப்படும். மேலும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், பழமையான நாகரிகம், புவியியல் பன்முகத்தன்மை, சுற்றுலா தலங்கள், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு துறையில் நவீன முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்த ' வியப்பூட்டும் இந்தியா' கண்காட்சி அமைக்கப்படும்.
***
(Release ID: 2034698)
Visitor Counter : 70