பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் வட இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி மையமாக உருவெடுக்கத் தயாராகி வருகிறது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 19 JUL 2024 8:29PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் வட இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி மையமாக உருவாகும் என்று உள்ளது மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். கிஷ்த்வார் மாவட்டத்தில்  ஜனதா தர்பார் எனப்படும் மக்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தினார். 

மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின். கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் 6 முதல் 7 பெரிய நீர்மின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.  1000 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய பகல் துல் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று அவர் கூறினார். மற்றொரு பெரிய திட்டமான 624 மெகாவாட் திறன் கொண்ட கிரு நீர்மின் திட்டமும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.

850 மெகாவாட் ரட்லே திட்டம் மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். கூடுதலாக, தற்போதுள்ள துல்ஹஸ்தி மின் நிலையம் 390 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது எனவும் துல்ஹஸ்தி II நீர்மின் திட்டம் 260 மெகாவாட் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.  முந்தைய அரசுகள் இந்த திட்டங்களை வேண்டுமென்றே  தடுத்துத் தடைகளை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மாவட்டத்தில் தீவிரவாதத்தை கடுமையாக குறைப்பதில் கிடைத்த வெற்றியை எடுத்துரைத்த அமைச்சர், அதை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர அரசு கடமைப்பட்டுள்ளது எனவும், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

 பெரும்பாலான பிரச்சினைகள் மக்களிடமிருந்து திருப்திகரமான பின்னூட்டங்களுடன் தீர்க்கப்படுவதாகவும் மீதமுள்ள பிரச்சினைகளும் குறித்து காலக்கெடுவுக்குள் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

*****

PLM/DL



(Release ID: 2034649) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi