பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2024 ஜூலை 1 முதல் 18 வரை மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் பொதுமக்களின் 1,43,650 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன
Posted On:
19 JUL 2024 8:33PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இம்மாதம் 1 முதல் 18ந் தேதி வரை தீர்க்கப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 1,43,650 குறைகள் மத்திய அமைச்சகங்கள் / துறைகளாலும், 38,934 குறைகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களாலும் தீர்க்கப்பட்டுள்ளன.
2024 ஜூலை 1 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் குறை தீர்ப்புக்கான முதல் 5 இடத்தில் உள்ள அமைச்சகங்கள்/துறைகள் பின்வருமாறு:
வ. எண் அமைச்சகம்/திணைக்களத்தின் பெயர் மொத்த குறை தீர்வு
1 ஊரக வளர்ச்சித் துறை 75,853
2 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 9,076
3 நிதிச் சேவைகள் திணைக்களம் (வங்கிப் பிரிவு) 7,561
4 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 6,050
5 மத்திய நேரடி வரிகள் வாரியம் (Income Tax) 4,737
இந்தக் காலகட்டத்தில் குறை தீர்ப்புக்கான முதல் 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு:
1 உத்தரப் பிரதேசம் 14,019
2 அசாம் 4,895
3 குஜராத் 3,405
4 ஹரியானா 2,143
5 மத்தியப் பிரதேசம் 1,964
*****
PKV/DL
(Release ID: 2034648)
Visitor Counter : 73