அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் என்பிஎல் ஆய்வகம், நீரின் தரம் குறித்த ஒரு நாள் பயிலரங்கை நடத்தியது

Posted On: 20 JUL 2024 10:13AM by PIB Chennai

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் என்பிஎல் ஆய்வகம் (NPL), 19 ஜூலை 2024 அன்று 'ஒரு வாரம் ஒரு கருப்பொருள்- ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ்' என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது. இது நீரின் தர உத்தரவாதம், பாரதிய நிர்தேசக் திவ்யா (BNDs) எனப்படும் தரநிலை ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-லின் மூத்த விஞ்ஞானி டாக்டர் எஸ்.ஆர். தகாட்டே முக்கிய உரையாற்றினார். பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ஸ்வரூபா திரிபாதி பயிலரங்கின் கருப்பொருள் பற்றி விளக்கினார். பாரதிய நிர்தேசக திரவியா தரநிலையைப் பயன்படுத்தி நீரின் தரத்தை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்தார்.

ஜல் சக்தி அமைச்சகத்தின் இயக்குநர் திரு பிரதீப் சிங், இந்தியாவில் நீர் தர மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர் தரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அவர் விளக்கினார்.

பல்வேறு அறிவியல், தொழில்துறை பயன்பாடுகளில் தரத்தையும் துல்லியத்தையும் உறுதி செய்வதில் தரநிலைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

***

PLM/DL



(Release ID: 2034588) Visitor Counter : 53


Read this release in: English , Urdu , Marathi , Hindi