வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், மின்சாரத் துறை திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2024 7:54PM by PIB Chennai
மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் சண்டிகரில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் மின்சாரத் துறைம் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, இமாச்சலப் பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் திரு விக்ரமாதித்ய சிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாநில அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மின்சார அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறையின் (RDSS) முன்னேற்றம் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இது தவிர, நீர்வளத் துறை தொடர்பான பிரச்சினைகள், மின்துறை மறுசீரமைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தனது உரையில், மின்சார விநியோகத் துறையை மேம்படுத்துவதிலும், மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் மின்சார விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் ஆர்டிஎஸ்எஸ்-ன் பங்கை எடுத்துரைத்தார். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கலுக்கு அனுமதிக்கப்பட்ட பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகளை மாநில அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், ஒட்டுமொத்த தொழில் நுட்ப, வணிக இழப்புகளை 10 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கவும், சராசரி விநியோக செலவுக்கும் சராசரி வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை நீக்கவும், நிதிச் சுமையைக் குறைக்கவும் அவர் அறிவுறுத்தினார். மாநிலத்தில் மின்சார விநியோகத்தை திறம்பட கண்காணிக்கவும், துல்லியமாக கணக்கிடவும் கணினி அளவி பணிகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
*****
PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2034578)
வருகையாளர் எண்ணிக்கை : 80