பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தினருக்கான விசிஸ்ட் சேவா பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கினார்

प्रविष्टि तिथि: 19 JUL 2024 7:03PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்தியக் கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 94 பேருக்கு, சேவா பதக்கங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி, ராணுவ தளபதி ஜென்ரல் உபேந்திர துவிவேதி, ராணுவத் துணைத்தளபதிகள் சுசீந்திர குமார், ராஜா சுப்பிரமணி உள்ளிட்ட 31 பேருக்கு பரம் விசிட் சேவா பதக்கங்களையும் (பிவிஎஸ்எம்), 4 பேருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கங்களையும், இருவருக்கு பார் டு அதிவிசிட் சேவா பதக்கங்களையும் 57 பேருக்கு அதி விசிட் சேவா பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் வழங்கினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034456  

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2034479) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi