எஃகுத்துறை அமைச்சகம்
வருமான வரித்துறையின் வரி செலுத்துவோருடனான தொடர்பு இயக்கம்
Posted On:
19 JUL 2024 5:53PM by PIB Chennai
வருமான வரித்துறையின் விசாகப்பட்டினம் துணை ஆணையர் திரு இஜ்ஜாடா மதுசூதன ராவ் ஏற்பாட்டின் பேரில், அங்குள்ள ராஷ்ட்ரீய இஸ்பத் நிகம் தொழிற்சாலையில், வரி செலுத்துவோருடனான மக்கள் தொடர்பு இயக்கம் நடைபெற்றது. வருமான வரித்துறை மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு மதுசூதன ராவ், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிதாக்கும் விதமாக வருமான வரித்துறையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்தல் தொடங்கி பல்வேறு டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தாக்கல் செய்யப்படும் கணக்குகளின் மூலம் வரி செலுத்துவோரின் நிதி பரிவர்த்தனை விவரங்கள் சேகரித்தல், மேல்முறையீடு செய்தல் போன்றவற்றிற்கும் வகை செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034432
***
MM/AG/DL
(Release ID: 2034461)
Visitor Counter : 77