பாதுகாப்பு அமைச்சகம்
சவூதி கடற்படை வீரர்கள் பயிற்சி நிறைவு
Posted On:
19 JUL 2024 4:17PM by PIB Chennai
கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப்பிரிவில் பயிற்சி பெற்று வந்த சவூதி கடற்படையின் 76-வது பயிற்சி அணியின் பயிற்சி, 2024, ஜூலை 18-ம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. துறைமுகத்திலும் ஆழ்கடலிலும் 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த மூன்று வாரப் பயிற்சியின் போது, சவூதி வீரர்களுக்கு கடல் பயண வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் குறித்தும், கப்பல்களை இயக்குவது, தொலைத்தொடர் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் போது கொச்சியை சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு சவூதி வீரர்கள் அழைத்து செல்லப்பட்டதுடன், இந்தியக் கடற்படை பயிற்சியாளர்களுடன் நட்புரீதியான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றனர்.
பயிற்சி நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்பிராந்திய கடற்படையின் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் உபல் குந்து கலந்து கொண்டு சவூதி கடற்படை பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2034417)
Visitor Counter : 46