கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கொல்கத்தா கப்பல் துறையில் சீனா கல்கத்தா சேவையின் தொடக்கம் பற்றி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
18 JUL 2024 8:00PM by PIB Chennai
முப்பது ஆண்டுகளுக்கு மேல் சரக்குப் பெட்டக சேவைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பசிபிக் இண்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம், சீனா கல்கத்தா சேவையை கொல்கத்தா கப்பல் துறையிலிருந்து தொடங்கியுள்ளது.
முதலாவது கப்பலான எம்/வி கோட்டா ரக்யத் கப்பலை, துறைமுகத்தின் துணைத்தலைவர் திரு சாம்ராட் ரஹி வரவேற்றார். இந்தக் கப்பலைத் தொடர்ந்து கோட்டா ருக்குன் என்ற கப்பல் 2024, ஜூலை 25 அன்று புறப்படும். சீன, கொல்கத்தா இடையே கோட்டா ரியா என்ற கப்பலுடன் சேர்த்து 3 கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. வாராந்தர சேவையை மேற்கொள்ளும் இவற்றின் பயணக் காலம் 10 முதல் 12 நாட்கள் வரை இருக்கும்.
இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஷ்கர், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம், பூடான் ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய இந்தக் கப்பல்களின் சேவை உதவியாக இருக்கும்.
***
(Release ID: 2034200)
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2034336)
आगंतुक पटल : 82