வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் "சிறப்பை நோக்கிய படிகள்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது

Posted On: 18 JUL 2024 6:58PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஜூலை 18   அன்று பிரதமரின் ஸ்வநிதி திட்டம்,  தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் சிறந்த செயல்பாட்டாளர்களை பாராட்டுவதற்காக "சிறப்பை நோக்கிய படிகள்என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது.

 

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், இந்தத் திட்டங்களின் வெற்றிக்கு அளித்த மகத்தான ஆதரவு, பங்களிப்பு ஆகியவற்றுக்காக மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கடன் வழங்கும் நிறுவனங்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் திரு அனுராக் ஜெயின் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வின் போது, இரண்டு முயற்சிகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. தீன்தயாள் அந்தியோதயா திட்டம்தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பயனாளிகளின் எழுச்சியூட்டும் கதைகள் அடங்கிய தொகுப்பும், கடந்த ஆண்டில் இத்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கும் ஆண்டறிக்கையும் இந்த நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டன.

 

2023-24 ஆம் ஆண்டின் சிறந்த சாதனைகளை நினைவுகூரவும், அந்த மைல்கற்களை அடைய அயராத முயற்சிகள் கருவியாக இருந்த பங்குதாரர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

****

(Release ID: 2034095)

PKV/RR/KR



(Release ID: 2034220) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP