ஜல்சக்தி அமைச்சகம்

கோபர்தன் முன்முயற்சியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தலைமையில் சி.பி.ஜி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை

Posted On: 18 JUL 2024 6:47PM by PIB Chennai

கோபர்தன் முன்முயற்சியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், பணிகள் குறித்த கருத்துக்களை சேகரிக்கவும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் புதுதில்லியில் நடைபெற்ற அழுத்தமூட்ட உயிரி எரிவாயு (சி.பி.ஜி) உற்பத்தியாளர்கள் மற்றும் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடினார். கரிமக் கழிவுகளை, இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு போன்ற மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ​கோபர்தன் முயற்சிக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டம் குறிக்கிறது.

இந்த நிகழ்வில் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், சி.பி.ஜி இயக்குனர்கள் மற்றும் துறையின் முன்னணி நிறுவனங்கள் உட்பட பல முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பாட்டீல், நீடித்த வளர்ச்சி மற்றும்  சுழற்சி பொருளாதாரம் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை உள்ளடக்கிய கோபர்தன் முன்முயற்சியை கருத்தாக்கம் செய்வதில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்தார். கரிமக் கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதன் மூலம், நாம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறோம். இந்தியாவின் நீண்டகால சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய இந்த முக்கியமான துறையை ஆதரிப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது”, என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, சி.பி.ஜி இயக்குனர்கள் தங்கள்  பிரச்சினைகளை அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக ரசாயன உரங்களின் அதிகப்படியான பயன்பாடு, நாட்டில்  உயிரி எரிவாயு துறையில் கார்பன் வரவுகளில் வர்த்தக முறையை மேம்படுத்துவதற்கான வரையறுக்கப்பட்ட பொறிமுறை இல்லாதது ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

***

(Release ID: 2034087)

PKV/BR/KR



(Release ID: 2034213) Visitor Counter : 44