இந்திய போட்டிகள் ஆணையம்
பெர்ஹயாண்டா மற்றும் பெர்ஹயாண்டா மிட்கோவின் சாதாரண பங்குகளை பிளாட்டினம் பாப்பி கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
Posted On:
18 JUL 2024 8:02PM by PIB Chennai
பெர்ஹயாண்டா மற்றும் பெர்ஹயாண்டா மிட்கோவின் சாதாரண பங்குகளை பிளாட்டினம் பாப்பி கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்மொழியப்பட்ட கருத்துரு சாதாரண பங்குகளை கையகப்படுத்துதல், பிளாட்டினம் பாப்பி மூலம் பெர்ஹ்யாண்டா மற்றும் பெர்ஹயாண்டா மிட்கோவுக்கு பங்குதாரர் கடனை நீட்டிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது, இதன் தொடர்ச்சியாக, பிளாட்டினம் பாப்பி சுவென் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திலும் இடம் பெறும். ஏனெனில் பெர்ஹ்யாண்டா தற்போது சுவெனில் நிறுவனத்தின் 50.1% பங்குகளை வைத்துள்ளது.
பிளாட்டினம் பாப்பி என்பது அபுதாபி உலகச் சந்தையில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது பெர்ஹ்யாண்டா மற்றும் பெர்ஹ்யாண்டா மிட்கோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. அபுதாபி முதலீட்டு ஆணையம் (ஏஐடிஏ), பிளாட்டினம் பாப்பியின் இறுதி பயனாளி ஆகும். இது அபுதாபி அமீரக அரசால் ஒரு சுதந்திரமான முதலீட்டு நிறுவனமாக நிறுவப்பட்ட ஒரு பொது நிறுவனமாகும். வளர்ந்த பங்குகள், வளர்ந்து வரும் சந்தை பங்குகள், சிறிய பங்குகள், அரசு பத்திரங்கள், கடன், நிலையான வருமானம், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு, தனியார் பங்கு, பணம் உள்ளிட்ட உலகளாவிய முதலீடுகளை ஏடிஐஏ நிர்வகிக்கிறது. இந்தியாவில், ஏடிஐஏ துறை முன்பு ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், காப்பீடு, மருந்துகள், வேளாண் இரசாயனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது.
பெர்ஹயாண்டா மற்றும் பெர்ஹ்யாண்டா மிட்கோ ஆகியவை அட்வென்ட் இன்டர்நேஷனல், எல்.பி. இரண்டு நிறுவனங்களும் முதலீட்டு ஹோல்டிங் நிறுவனங்களாகும்.
சுவெனில் என்பது இந்தியாவில் இணைக்கப்பட்ட ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2018-ல் இணைக்கப்பட்டது.
***
(Release ID: 2034123)
(Release ID: 2034210)
Visitor Counter : 70