பாதுகாப்பு அமைச்சகம்
நமது எதிரிகளை முறியடிக்க இந்திய ராணுவத்தால் பலவகையான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: முப்படைகளின் தளபதி அனில் சௌகான்
प्रविष्टि तिथि:
18 JUL 2024 6:03PM by PIB Chennai
நமது எதிரிகளை முறியடிக்க இந்திய ராணுவத்தால் பலவகையான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். கார்கில் வெற்றி தினத்தின் 25-வது ஆண்டினை குறிக்கும் வகையில், இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் வகையில், உள்நாட்டு வழிமுறைகளிலும் முன்னேற்றமான நிலையிலும் அடிப்படை கட்டமைப்பு, வலுவான நடைமுறை உத்திகள் ஆகியவற்றை மேம்படுத்தும் திறனை ராணுவம் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நமது எல்லைகளை பாதுகாப்பதில் ராணுவம் விழிப்புடனும், தயார் நிலையிலும் இருப்பதை கார்கில் வெற்றி எடுத்துக்காட்டியிருப்பதாக அவர் கூறினார்.
கார்கில் விருதுகளை வழங்கிய ஜெனரல் அனில் சௌகான், கார்கில் போரின் போது தியாகங்கள் செய்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034069
***
SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2034129)
आगंतुक पटल : 93