பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுவான பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு, சிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவாற்றலை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தீர்வு காண முடியும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 18 JUL 2024 6:25PM by PIB Chennai

பொது கொள்கை, அரசாட்சி குறித்து சிறப்பு திறன் உருவாக்கம் தொடர்பாக பங்களாதேசைச் சேர்ந்த 16 துணை ஆணையர்களுடன் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், ஆயுஷ்மான் பாரத், சிபிஜிஆர்ஏஎம்எஸ், ஸ்வமித்வா போன்ற இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள், பங்களாதேஷ் நாட்டிலும் செயல்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டினார். இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா முன்மாதிரி நாடாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.

நோய்களை கையாளுதல், நிலப்பரப்பு தொடர்பான சவால்களை எதிர்நோக்கும் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள மாவட்டங்களை அடையாளம் கண்டு, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொண்டு இரு நாடுகளும் ஒத்துழைப்பதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின், ‘அண்டை நாடு முதலில்’ என்ற கொள்கை, இந்தியா-பங்களாதேஷ் இடையிலான நட்புறவை பலப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034078

***

MM/AG/DL


(Release ID: 2034104) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP