மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பொதுச் சேவை மைய சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டதன் 15 ஆண்டுகள் நிறைவு விழா- மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா பங்கேற்பு
Posted On:
16 JUL 2024 9:32PM by PIB Chennai
பொதுச் சேவை மையங்கள் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்ட 15 ஆண்டு நிறைவு தினம் புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறைச் செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், பொது சேவை மைய மேலாண்மை இயக்குனர் திரு சஞ்சய் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, ஆர்வமுள்ள கிராம அளவிலான தொழில்முனைவோரின் முயற்சிகளைப் பாராட்டியதோடு, தொழில்நுட்பத்தால் செயற்கை நுண்ணறிவாலும் மாறிவரும் இக்காலத்தில், அடுத்த 15 ஆண்டுகளில் பொதுச் சேவை மையங்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். வானிலை, விவசாயம் போன்றவை தொடர்பான தகவல்களும் பொது சேவை மையங்கள் மூலம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய மின்னணுவியல் துறை அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன் , "கிராமப்புற தொழில்முனைவோரையும் டிஜிட்டல் மேம்பாட்டையும் ஊக்குவிப்பதில் பொதுச் சேவை மையங்கள் குறிப்பிடத்தக்க ஆற்றுவதாகத் தெரிவித்தார். கிராமப்புற மக்களுக்கு கடைசி நிலை வரை அரசின் திடங்களையும் சேவைகளையும் வழங்குவதில், பொதுச் சேவை மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
**************
PLM/KV
(Release ID: 2033818)
Visitor Counter : 55