வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அமெரிக்காவிற்கு எள் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கான வரைவு நடைமுறை
Posted On:
15 JUL 2024 6:13PM by PIB Chennai
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எள் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையைப் போன்று, எள் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு, இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலிடமிருந்து 2016, பிப்ரவரி 03, தேதியிட்ட அறிவிக்கை மூலம் ஒரு கோரிக்கையை வர்த்தக அமைச்சகம் பெற்றது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எள் விதைகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறையை இறுதி செய்ய துறை உத்தேசித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான எள் விதைகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான வரைவு நடைமுறை குறித்து, பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள், பரிந்துரைகளை moc_epagri[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் 2024, ஆகஸ்ட் 12, மாலை 04:00 மணி அல்லது அதற்கு முன்பாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
***
MM/BKR/KR
(Release ID: 2033590)