கலாசாரத்துறை அமைச்சகம்
உலக பாரம்பரிய இளம் தொழில்நுட்பவியலாளர்கள் அமைப்பு 2024 தொடங்கப்பட்டது
Posted On:
15 JUL 2024 8:50PM by PIB Chennai
யுனெஸ்கோவின் மதிப்புமிக்க உலக பாரம்பரியக் குழுவின் கூட்டம், இந்தியாவின் சார்பில், முதல் முறையாக 2024, ஜூலை 21 முதல் 31 வரை புதுதில்லியில் நடத்தப்பட உள்ளது. உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வின் ஒருங்கிணைந்த அம்சமாகவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கல்வித் திட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டும், மத்திய கலாச்சார அமைச்சகம், உலக பாரம்பரிய இளம் தொழில்நுட்பவியலாளர்கள் அமைப்பின் 2024-க்கான கூட்டத்தை நடத்த உள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் உப அமைப்பான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் பயிற்சி நிறுவனம், 21-ம் நூற்றாண்டில் உலக பாரம்பரியம்: திறன் உருவாக்கம் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்தல் என்ற தலைப்பில், புதுதில்லியில் 2024, ஜூலை 14 முதல் 23-ம் தேதி வரை இளம் தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறது.
மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் திரு யதுபீர்சிங் ராவத், யுனெஸ்கோ தூதர் திரு விஷால் சர்மா, தொல்லியல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர்கள் திரு அலோக் திரிபாதி, திரு ஜான்விஜ் சர்மா, திட்ட அதிகாரி திருமதி ஐனெஸ் யூசுஃபி ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள 50 (இந்தியாவிலிருந்து 20, பிறநாடுகளிலிருந்து 30 பேர்) தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
நமது தேசிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் ஊக்குவிப்பதில் நமது இளம் தொழில்நுட்பவியலாளர்களின் நிபுணத்துவம், திறன், வல்லமையை மேம்படுத்த, இந்த நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். உலக பாரம்பரியம் பற்றிய உலகளாவிய தத்துவங்கள் குறித்த ஞானத்தை ஆழமாக அறிந்து விவாதிப்பதுடன், நீடித்த வளர்ச்சி குறித்தும் விவாதிப்பதோடு, இந்தியாவின் உள்ளூர் பாரம்பரியத்தில் பிரபலமடைவதற்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033506
----
MM/KPG/KR
***
(Release ID: 2033569)