பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்லாட்சிக்கான தேசிய மையம் பங்களாதேஷின் 16 துணை ஆணையர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது

Posted On: 15 JUL 2024 5:38PM by PIB Chennai

நல்லாட்சிக்கான தேசிய மையம், பங்களாதேஷின் 16 துணை ஆணையர்களுக்கான பொதுக் கொள்கை, ஆளுமை குறித்த ஒரு வார கால சிறப்புத் திறன் மேம்பாட்டு திட்டத்தை தில்லியில் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி புதுதில்லியில் 2024 ஜூலை 15 முதல் 2024 ஜூலை 20 வரை நடத்தப்படுகிறது. மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், 2024 ஜூலை 18 அன்று பங்களாதேஷ் துணை ஆணையர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

தொடக்க அமர்வில் நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் உரையாற்றினார். முக்கியத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடையும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றி செயல்படுத்துவதில் இந்தியாவின் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளும் முன்மாதிரியான பணிகள் குறித்து இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

பங்களாதேஷ் துணை ஆணையர்கள் - இந்திய மாவட்ட ஆட்சியர்கள் இடையேயான கலந்துரையாடல், சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு, மேம்படுத்துவதில் பரஸ்பரம் பயனளிக்கும். இந்த விரிவான பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்த இந்திய அரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய மையத்துக்கும் பங்களாதேஷ் குழுவின் தலைவர் திரு ரபிகுல் இஸ்லாம் நன்றி தெரிவித்தார்.

Release ID: 2033412

PLM/KR

***


(Release ID: 2033559) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP