திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
உலக இளைஞர் திறன் தினம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி பங்கேற்பு - வாழ்நாள் முழுவதும் கற்றபது அவசியம்: திரு. ஜெயந்த் செளத்ரி
Posted On:
15 JUL 2024 8:59PM by PIB Chennai
ஐநா சபையால் உலக அளவில் இளைஞர் திறன் தினமாக ஜூலை 15-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு "கௌஷல் சம்வாத்" என்ற பெயரில் திறன் மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது மூலம் பல்வேறு திறன்களில் பயிற்சி பெற்ற நிபுணர்களுடனும் அவர்களின் பயிற்சியாளர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவில் திறன் மேம்பாட்டையும், தொழில்முனைவோர் சூழலையும் வலுப்படுத்த தமது அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். நிலையான வளர்ச்சியில் இளைஞர்களின் திறன்களின் பங்கு முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
வாழ்நாள் முழுவதும் கற்றல் அவசியம் என்றும் பள்ளிகளில் அடிமட்டத்திலிருந்து பல்வேறு திறன்களை ஊக்குவி்க்க தமது அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய துறையின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.40 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Release ID: 2033515
PLM/KR
***
(Release ID: 2033556)
Visitor Counter : 58