கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

நாகாலாந்தில் சரக்கு போக்குவரத்துக்காகவும் பயணிகள் போக்குவரத்துக்காகவும் திஸு ஸுன்கி நதி பயன்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்

Posted On: 15 JUL 2024 8:00PM by PIB Chennai

நாகாலாந்தில் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திமாபூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், திஸு ஸுன்கி நதியில் சரக்கு போக்குவரத்தும் பயணிகள் போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று அறிவித்தார். டோயாங் நதியில் சமூக படகுத்துறைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது மாநிலத்தின் சுற்றுலாத் திறனை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

நீர்வழிப் போக்குவரத்து மிகவும் சிக்கனமான, நிலையான, திறன்வாய்ந்த போக்குவரத்து முறையாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்குப் பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்த அவர் வடகிழக்குப் பகுதியில் உள்ள நீர்வழிப் பாதைகளின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார். இந்தப் பகுதியில் புதுப்பிக்கப்படும் நீர்வழித் தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரை திரு சர்பானந்த சோனாவால் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் நாகாலாந்து துணை முதலமைச்சர் திரு யாந்துங்கோ பட்டோன், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திரு டெம்ஜென் இம்னா அலோங், தேசிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைவர் திரு சுனில் குமார் சிங், நாகாலாந்து அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Release ID: 2033481

PLM/KR

***



(Release ID: 2033554) Visitor Counter : 9