அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

முடக்குவாத நோயாளிகளுக்கு யோகா நிவாரணம் வழங்கும்

Posted On: 15 JUL 2024 4:45PM by PIB Chennai

முடக்குவாத நோயாளிகளின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை  யோகா ஏற்படுத்தும் என்பதை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு காட்டுகிறது.

முடக்குவாதம் என்பது  மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகிறது. இதனால், மூட்டுகளில் வலியும், சேதமும் ஏற்படுவதோடு, நுரையீரல், இதயம், மூளை போன்ற பிற உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  பாரம்பரியமாக யோகா பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களை  தருகிறது என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் யோகாப் பயிற்சி வலி நிவாரணியாக  மட்டுமின்றி, செலுலார் மற்றும் மூலக்கூறு நிலையிலும்  பயனளிப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது.  யோகாப் பயிற்சி செலுலார் சேதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம்   வலியை குறைக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் 2023-ல் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விவரங்களை https://www.nature.com/articles/s41598-023-42231-w என்ற இணைப்பில் காணலாம். இந்த ஆய்வு முடக்குவாத நோயாளிகளுக்கு யோகாப் பயிற்சி சிறந்தது என்பதற்கு சான்றளிக்கிறது. வலி, இறுக்கமான தன்மை போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்கிறது. மருந்துகளை போல் யோகாவில் பக்கவிளைவு இல்லை என்பதோடு, செலவு குறைந்ததாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033376

***

SMB/RS/DL


(Release ID: 2033475) Visitor Counter : 81