அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"புத்தொழில் நிறுவனங்களின் நீடித்தத் தன்மைக்கு வலுவான தொழில் மேலாண்மைத் தொடர்பு தேவை": டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 15 JUL 2024 4:37PM by PIB Chennai

"புத்தொழில் நிறுவனங்களின் நீடித்தத் தன்மைக்கு வலுவான தொழில் மேலாண்மைத் தொடர்பு தேவை" என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் இந்திய மேலாண்மை நிறுவனம் போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

ஜம்முவின் புறநகரில் உள்ள ஜக்தியில் நிறுவப்பட்டுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்) எம்பிஏ பிரிவின் புதிய மாணவர்களுக்கான அறிமுகத் திட்டத்தின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார். வலுவான தொழில்துறை தொடர்புகள் காரணமாக பெரும்பாலான புத்தொழில் நிறுவனங்கள் வெற்றியைக் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். உதாரணமாக, வாசனைப் பொருள் உற்பத்தியில், வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்ததன் மூலமும், லாவெண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், பிற தயாரிப்புகள் போன்ற இமயமலைப் பகுதி தயாரிப்புகளின் விற்பனைக்காக சந்தை அணுகலை எளிதாக்கியதன் மூலமும் அரசு வெற்றியின் உதவியாளராக மாறியது என்று அவர் விளக்கினார்.

இமயமலை உயிரி வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கண்டறியப்படாத கனிமங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு மதிப்பைக் கூட்டவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். "இந்தியாவின் கடலோர மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் போன்ற இமயமலை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆர்வமுள்ள தலைமுறையினரைப் பற்றி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இது சிறந்த காலம் என்று தெரிவித்தார். புதிய தொழில்கள் வளர்ந்து வருவதாகவும், அதன் விளைவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். "அனைத்துப் பகுதியிலிருந்தும் அனைவரும் வாய்ப்பைப் பெறும் வகையில் தொழில்நுட்பம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033369

****

 

SMB/IR/KPG/DL


(Release ID: 2033467) Visitor Counter : 67


Read this release in: Urdu , English , Hindi , Hindi_MP