புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

நாட்டின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு மே 2024-ல் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது

Posted On: 12 JUL 2024 5:30PM by PIB Chennai


2024 மே மாதத்தில், 2011-12 அடிப்படையுடன் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள்  154.2 ஆக உள்ளது. 2024 மே மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 136.5, 149.7, 229.3  ஆக உள்ளன. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

2024 மே மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 5.9 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2023 மே மாதத்தை விட 2024 மே மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 6.6, 4.6, 13.7 சதவீதமாகும்.

உற்பத்தித் துறைக்குள், 2024 மே மாதத்திற்கான தொழில் துறை உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை, அடிப்படை உலோகங்கள் உற்பத்தி (7.8%), மருந்துகள், மருத்துவ ரசாயன, தாவரவியல் தயாரிப்புகளின் உற்பத்தி (7.5%), மின் உபகரணங்கள் உற்பத்தி (14.7%) ஆகிய பிரிவுகள் பிடித்துள்ளன.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. (12ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு முந்தைய வேலை நாளில் வெளியிடப்படுகின்றன). ஜூன் மாதத்திற்கான குறியீடு 2024 ஆகஸ்ட் 12 திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும். 


****************

PLM/KV



(Release ID: 2032986) Visitor Counter : 20