வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய பொதுப்பணித் துறை 170-வது ஆண்டைக் கொண்டாடுகிறது: இத்துறை, காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்
Posted On:
12 JUL 2024 6:27PM by PIB Chennai
மத்திய பொதுப்பணித் துறை (CPWD) தனது 170-வதுஆண்டு தினத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டின் முதன்மையான கட்டுமான முகமை இது என்றும் இதன் குறிப்பிடத்தக்க பயணத்தைப் பாராட்டுவதகவும் கூறினார்.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு தோகான் சாஹு பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய பொதுப்பணித் துறை ஏற்படுத்தியுள்ள மாற்றம் குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார். அதன் சாதனைகளை எடுத்துரைத்த அவர், மத்திய பொதுப்பணித்துறை கட்டிய புதிய நாடாளுமன்றத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு அனுராக் ஜெயின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***************
PLM/KV
(Release ID: 2032961)
Visitor Counter : 61