விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட்அப் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதற்காக 'புத்தொழில் நிறுவனங்கள்’ மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதியம்' ஒன்றை அரசு விரைவில் தொடங்க உள்ளது

Posted On: 12 JUL 2024 6:41PM by PIB Chennai

துறை சார்ந்த  மற்றும் கடன் மாற்று முதலீட்டு நிதிகளில் (ஏ.ஐ.எஃப்) முதலீடுகள் செய்வதன் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்களை ஆதரிப்பதற்காக, ' புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதியத்தைத்' தொடங்க அரசு தயாராக உள்ளது. 750 கோடி வகை-II மாற்று முதலீட்டு நிதியை நிறுவுவதன் மூலம் இந்தியாவின் வேளாண் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிதி ஈக்விட்டி மற்றும் கடன் ஆதரவு இரண்டையும் வழங்கும், குறிப்பாக விவசாய மதிப்புச் சங்கிலியில் அதிக இடர்கள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது.

மும்பையில் உள்ள நபார்டு தலைமையகத்தில் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஏ.ஐ.எஃப் மேலாளர்கள் மற்றும் வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணைச் செயலாளர் திரு அஜீத் குமார் சாஹு, நபார்டு தலைவர் திரு ஷாஜி கே.வி, நபார்டு வங்கியின் துணை மேலாண்மை இயக்குநர்கள்  திரு கோவர்தன் சிங் ராவத் மற்றும் டாக்டர் அஜய் குமார் சூட் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய திரு அஜீத் குமார் சாஹு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், புதுமையான அணுகுமுறைகள் மூலம் வேளாண் துறைக்கு நிதியுதவியை மேம்படுத்தும் சூழலியலை உருவாக்குவதற்கான நிதியத்தின் திறனை எடுத்துரைத்தார். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியை ஏற்படுத்த பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பின் அவசியத்தை திரு ஷாஜி கே.வி வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032838

************

BR/KV


(Release ID: 2032959) Visitor Counter : 75