புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நீலப் பொருளாதாரத்தில் இந்தியா-நார்வே ஒத்துழைப்பு குறித்து அந்நாட்டுக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்
Posted On:
12 JUL 2024 6:54PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நீலப் பொருளாதாரத்தில் இந்தியா -நார்வே ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கான நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நீலப் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழு பலப்படுத்தப்படும் என்று இந்த சந்திப்பின்போது அமைச்சர் கூறினார்.
இந்தியா-நார்வே ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை ஆராய்ச்சி முன்முயற்சியைக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தில் இந்தியாவின் நீலப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கான நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் கூறுகையில், நார்வேயிடம் தொழில்நுட்பம் உள்ளது எனவும் இந்தியாவிடம் அசாத்தியத் திறன் உள்ளது என்றும் கூறினார். கடல் ஆய்வு, துருவ ஆய்வுகளில் இந்தியாவுடன் உறவுகளை மேலும் மேம்படுத்த நார்வே தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
*************
PLM/KV
(Release ID: 2032956)
Visitor Counter : 40