பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளுடன் CPGRAMS-ல் (மத்திய பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு) குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன

Posted On: 12 JUL 2024 5:24PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) ஜூலை 2024 முதல் 11 நாட்களுக்கு தீர்க்கப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 2024 ஜூலை 1 முதல் 11 வரை  90,686 குறைகள் மத்திய அமைச்சகங்கள் / துறைகளால் தீர்க்கப்பட்டதுடன், 25,989 குறைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் தீர்க்கப்பட்டன.

2024 ஜூலை 1 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் குறை தீர்ப்புக்கான இந்திய அரசில் உள்ள முதல் 5 அமைச்சகங்கள்/துறைகள் பின்வருமாறு:

வரிசை எண்

மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் பெயர்

1

ஊரக வளர்ச்சித் துறை

2

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

3

நிதிச் சேவைகள் துறை (வங்கிப் பிரிவு)

4

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை

5

மத்திய நேரடி வரிகள் வாரியம் (Income Tax)

 2024 ஜூலை 1 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் குறை தீர்ப்புக்கான முதல்  5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு:

வ. எண்

மாநிலத்தின் பெயர்

1

உத்தரப்பிரதேசம்

2

அசாம்

3

குஜராத்

4

ஹரியானா

5

பீகார்

 

குடிமக்கள் CPGRAMS போர்ட்டலில் உள்நுழைவதன் மூலம் குறைகளை பதிவு செய்து தாக்கல் செய்யலாம் www.pgportal.gov.in

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032775

***

LKS/RS/DL


(Release ID: 2032861) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP