வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வணிகர் நல வாரியத்தின் 3-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 12 JUL 2024 4:10PM by PIB Chennai

தேசிய வணிகர்கள் நல வாரியத்தின் (NTWB) மூன்றாவது கூட்டம் அந்த வாரியத்தின் தலைவர் திரு சுனில் ஜெ சிங்கி தலைமையில் நேற்று (11 ஜூலை 2024) புதுதில்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தின் திறந்த காணொலி இணைப்பு தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள வணிகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த உதவும். வாராந்திர அடிப்படையில் சில்லறை வர்த்தகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து வணிகர்கள் காணொலி மூலம் இந்த வாரியத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

உறுப்பினர்களிடமிருந்தும், வணிகர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள் தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று இந்தக் கூட்டத்தில் திரு சுனில் ஜெ சிங்கி எடுத்துரைத்தார். சில்லறை வணிகம் தொடர்பான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவை மக்களைச் சென்றடையவும் உறுப்பினர்களிடமிருந்து ஆலோசனைகள் கோரப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வர்த்தக சங்கங்கள், மாநில, யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்கள், மத்திய அரசின் ஒன்பது அமைச்சகங்கள், துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2032741)

PLM/AG/RR


(Release ID: 2032752) Visitor Counter : 81