கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கோவாவில் ரூ.1183 கோடி செலவில் அமைக்கப்பட்ட 6 வழிச் சாலைத் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
11 JUL 2024 8:17PM by PIB Chennai
கோவாவில் நவீன சாலை இணைப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 166எஸ்-ல், தர்கல் வரை தரம் உயர்த்தப்பட்ட 6 வழிச் சாலையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரூ. 1183 கோடி செலவில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டம், மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தவும், விரைவான பயணத்தை எளிதாக்கவும் உதவும். இது சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தி, பல்வகைப் போக்குவரத்து இணைப்புக்கு ஊக்கமளித்து, சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்கான் முதல் கர்நாடக எல்லை வரை ரூ.3,500 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்குப் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் திரு நிதின் கட்கரி இந்த நிகழ்ச்சியின்போது அறிவித்தார். தேசிய நெடுஞ்சாலை 748-ல் உள்ள பனாஜி-பெல்காம் பிரிவை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 52 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்தத் திட்டம் ரூ. 4000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார்.
***
(Release ID: 2032560)
Vl/PLM/RR
(Release ID: 2032624)