கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கிழக்குக் கடற்கரை துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து ஆராய 13 பேர் கொண்ட பங்களாதேஷ் குழு இந்தியா வந்துள்ளது
Posted On:
11 JUL 2024 4:46PM by PIB Chennai
கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்திய துறைமுகங்கள் வழியாக பங்களாதேஷுக்கு சரக்குப் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக, 13 பேர் கொண்ட பங்களாதேஷ் குழு இந்தியா வந்துள்ளது.
2024 ஜூலை 9 முதல் 12ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் இந்தக் குழுவுக்கு பங்களாதேஷின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு எஸ் எம் முஸ்தபா கமால் தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் அந்நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள், துறைமுகங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை, கிருஷ்ணாபட்டினம், விசாகப்பட்டினம், கொல்கத்தா, ஹால்டியா துறைமுகங்களுக்கும் இந்தக் குழு சென்றது. கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னை துறைமுக ஆணையம், கிருஷ்ணபட்டினம் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் கீழ் உள்ள கொல்கத்தா துறைமுகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் பங்களாதேஷ் பிரதிநிதிகள் பயனுள்ள ஆலோசனைகளை நடத்தினர்.
டாக்கா - விசாகப்பட்டினம் இடையே நதிக் கப்பல் சேவைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தக்குழு விவாதித்தது. இந்தியா - பங்களாதேஷ் இடையே கடல்சார் இணைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
***
(Release ID: 2032451)
VL/PLM/RR
(Release ID: 2032614)
Visitor Counter : 46