பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியா-இலங்கை இடையே பணியாளர் நிர்வாகம் மற்றும் ஆளுமையில் ஒருங்கிணைப்புக்கான பேச்சுக்கள் நேர்மறையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது
Posted On:
11 JUL 2024 11:25AM by PIB Chennai
மத்திய அரசின் பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சக செயலாளரும், சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநருமான திரு வி.ஸ்ரீனிவாஸ், தலைமையிலான உயர்நிலைக்குழு, 2024 ஜூலை 7 முதல் 9 வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கையின் பொதுத்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடல் வாயிலாக விவாதிக்கப்பட்டது.
2024-ம் ஆண்டு 2029-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1,500 இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான இலங்கை நிர்வாக மேம்பாட்டு மையத்திற்கும், தேசிய சிறந்த நிர்வாகத்திற்கான மையத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.
பயணத்திற்கு இடையே கொழும்பில் ஜூலை 9 அன்று இலங்கை பிரதமர் திரு தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்தனாவை, இந்தியக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அத்துடன் இலங்கை அதிபரின் செயலாளர் திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க, அந்நாட்டு பிரதமரின் செயலாளர் திரு அநுர திசாநாயக்க உள்ளிட்டவர்களையும் இந்தியக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032310
***
SMB/IR/KPG/KV
(Release ID: 2032482)
Visitor Counter : 71