வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான சிறந்த ஒத்துழைப்பால் சத்தீஸ்கர் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடையும்: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்

प्रविष्टि तिथि: 10 JUL 2024 5:45PM by PIB Chennai

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் ராய்ப்பூரில் இன்று (10.07.2024) சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்சாரம், நகர்ப்புற வளர்ச்சித் துறையில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்  கூறினார். மின்சாரம், வீட்டுவசதி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

மத்திய அரசு வழங்கும் அனைத்து நிதியையும், மானியங்களையும் மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், அம்ருத் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம், பொலிவுறு நகரத் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சரும், மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை  அமைச்சருமான திரு அருண் சாவ்,  மாநில அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

***

SMB/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2032196) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP