கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லண்டனில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் அமைப்பின் கூட்டத்தில் இந்திய உயர்நிலைக்குழு பங்கேற்பு

Posted On: 10 JUL 2024 4:23PM by PIB Chennai

லண்டனில் நடைபெறும் சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐஎம்ஓ)  132-வது கூட்ட அமர்வில், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட இந்தியக்குழு பங்கேற்றது. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகளின் பிரிவில் ஐ.எம்.ஓ கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரா இந்தியா உள்ளது.

கூட்டத்தில் பேசிய கப்பல் துறைச் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன், மாலுமிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், கடல்சார் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியா ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றார். சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான கடல்சார் நடைமுறைகளை ஊக்குவிப்பதில் இந்தியா சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று அவர் கூறினார். கடல்சார் துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த உலக அளவில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2024 ஜூலை 8  அன்று தொடங்கிய ஐஎம்ஓ கவுன்சிலின் 132-வது அமர்வு, 2024  ஜூலை 12 வரை நடைபெறுகிறது. உலக அளவில் சிறந்த கடல்சார் நடவடிக்கைகள், எதிர்கால உத்திகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

***


(Release ID: 2032160) Visitor Counter : 58