இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவின் 25-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUL 2024 9:29PM by PIB Chennai

பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவின் 25-வது கூட்டம், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

இந்தியாவில் கரியமிலவாயு கட்டுப்பாடு, அது தொடர்பாக வலுவான கொள்கை வகுப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசுத்துறைகளின் முக்கிய அதிகாரிகளும், தொழில்துறை பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 45 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது.  

***

(Release ID: 2031937)

SMB/PLM/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2032127) வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP