சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

அனைத்து சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க, “சர்வ சமயக் கூட்டங்களை” நடத்துமாறு தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது

Posted On: 09 JUL 2024 9:11PM by PIB Chennai

அனைத்து சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க, “சர்வ சமயக் கூட்டங்களை” நடத்துமாறு தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது. சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்/ வெறுப்பு குற்றங்கள் போன்றவற்றை தடுக்க, இத்தகையைக் கூட்டங்களை மாதம் ஒருமுறையாவது துணைக் கோட்ட அளவிலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட அளவிலும் நடத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மனரீதியான பலவீனம், கோபம் காரணமாக சமூகத்தில் ஏற்படும் கசப்புணர்வு, சமூகப் பிணக்கு ஆகியவை மட்டுப்படும் என்றும் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் தெரிவித்துள்ளது.  குடிமக்கள் ஒவ்வொருவரும்  அவரவர் சமயத்தை பின்பற்றவும், போதிக்கவும் உரிமை உண்டு என்றும் அது கூறியுள்ளது.  சமூக விரோதிகள், அதிருப்பதியை வளர்க்கும் சக்திகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இவர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்பு குற்றங்களை கண்டிப்பது குடிமக்களின், சமூகத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தேசிய ஆணையம் கூறியுள்ளது.

***

(Release ID: 2031933)

SMB/RS/KR



(Release ID: 2032081) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Punjabi