சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை கையெழுத்திட்டுள்ளது
Posted On:
09 JUL 2024 6:53PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இரண்டு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை கையெழுத்திட்டுள்ளது. துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறைக்கும் ‘எனேபில் மீ ஆக்சஸ்’ சங்கத்துக்கும் (EMA) இடையே கையெழுத்தானது. இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துக்கும் யூனிக்கி சைகை மொழி நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.
‘எனேபில் மீ ஆக்சஸ்’ சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் அதிகாரிகளுக்கு பயிற்சி திட்டங்களை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஐஎஸ்எல்ஆர்டிசி, யூனிக்கி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், காது கேளாதோருக்கு திறன் பயிற்சி வழங்குவது தொடர்பானதாகும்.
***
(Release ID: 2031861)
PKV/PLM/AG/KR
(Release ID: 2032056)