பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கம்போடிய குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
06 JUL 2024 3:49PM by PIB Chennai
கம்போடியாவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்து. புதுதில்லியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் 2024 ஜூன் 24 முதல் ஜூலை 5 வரை இரண்டு வாரங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் பயிற்சித் திட்டத்தில் கம்போடியாவைச் சேர்ந்த இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 40 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிறைவு அமர்வு நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும் மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் செயலாளருமான திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நீண்டகால நட்புறவு மற்றும் வரலாற்று உறவுகளை அவர் அப்போது எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கான கம்போடிய தூதர் திரு கோய் குவோங் பங்கேற்றார்.
பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிஷியா, செஷல்ஸ், காம்பியா, மாலத்தீவு, இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூடான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்ரியா மற்றும் கம்போடியா ஆகிய 17 நாடுகளின் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் இதுவரை பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
***
PLM/KV
(Release ID: 2031254)
Visitor Counter : 67