கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்தியக் கப்பல் கட்டும் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பது குறித்த பயிலரங்கை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடத்தியது

Posted On: 04 JUL 2024 8:12PM by PIB Chennai

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், இந்தியக்  கப்பல் கட்டும் தொழிலுக்குப் புத்துயிரூட்டுவது குறித்த பயிலரங்கை புதுதில்லியில் நடத்தியது.  கப்பல் துறை அமைச்ச கத்தின் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், இந்தியாவில் கப்பல் கட்டும் போக்குவரத்து, பழுதுபார்க்கும் தொழில் துறை அமைப்பைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான உத்திகள் குறித்து  விவாதிக்கப்பட்டது.


பயிலரங்கில் பேசிய மத்திய கப்பல், அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் இந்தியா உலகளாவிய பொருளாதார வல்லரசாக மாறுவதை நோக்கிச் செல்வதாகவும் இந்தப் பயணத்தில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.  கப்பல் கட்டும் தொழில்களிலும் தற்சார்பை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். துறைமுக உள்கட்டமைப்பிலும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திலும் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நாம் வெளிநாட்டுக் கப்பல்களை சார்ந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். தற்சார்பு இலக்குகளை அடைய உள்நாட்டுக் கப்பல் கட்டுவதிலும் கப்பல் பழுதுபார்ப்பதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அமைச்சகம் இப்போது கவனம் செலுத்துகிறது என அவர் குறிப்பிட்டார். 


இந்தப் பயிலரங்கில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், கப்பல் நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் துறை கப்பல் கட்டும் தளங்களின் பிரதிநிதிகள் உட்பட 50 நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

***

PLM/RR/DL



(Release ID: 2031038) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP