மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு 2024 நிறைவடைந்தது

Posted On: 04 JUL 2024 7:37PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மாநாடு இன்று (ஜூலை 04, 2024) வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு நாட்களில், 12 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் 2,000 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை / புத்தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். 10,000 க்கும் மேற்பட்ட  செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்கள், மெய்நிகர்  வாயிலாக அமர்வுகளில் இணைந்தனர். செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மையின் (ஜி.பி.ஏ.ஐ) பிரதிநிதிகளையும் நிபுணர்களையும் கொண்ட சில கூடுதல் அமர்வுகளும் நடத்தப்பட்டன.

2,000  செயற்கை நுண்ணறிவு  வல்லுநர்களும் பயிற்சியாளர்களும் அமர்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்டனர். மெய்நிகர்  வாயிலாக கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியது. ஒவ்வொரு அமர்விலும் பல அம்சங்களில் ஆழமான உள்ளார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. முக்கிய சவால்கள், கிடைக்கக்கூடிய மேற்கத்திய மாதிரி, அதன் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு சொற்பொழிவை வடிவமைப்பதில் இந்தியாவின் தனித்துவமான தேவை உலகளாவிய  செயற்கை நுண்ணறிவு தலைமையை அடைவது ஆகியவை இதில் அடங்கும். செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் அரசின் நோக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய விவாதத்தைக் கட்டமைத்தது.

இந்தியா செயற்கை நுண்ணறிவு  இயக்கத்தின் முக்கிய தூண்கள் குறித்த அமர்வுகள், நாட்டில் உள்ளடக்கிய, வலுவான  செயற்கை நுண்ணறிவு  சூழலை  உருவாக்குவதற்கும், உலகளாவிய  செயற்கை நுண்ணறி கண்டுபிடிப்புகளை வழிநடத்துவதற்கும் இந்தியாவின் திட்டமிட்ட  செயல்பாட்டையும் உறுதிப்பாட்டையும் நிரூபித்தன. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மன்றத்தில் தங்களுக்குக் குரல் கொடுப்பதிலும், உலகளாவிய வடக்குடனான இடைவெளியைக் குறைப்பதிலும் இந்தியாவின் பங்கை உலகளாவிய தெற்கு நாடுகள் பாராட்டின.

***

(Release ID: 2030838)

SMB/BR/RR



(Release ID: 2030946) Visitor Counter : 58