ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிளாஸ்டிக் மறு சுழற்சி, நீடித்த தன்மை குறித்த உலகளாவிய மாநாடு பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது

Posted On: 04 JUL 2024 3:50PM by PIB Chennai

பிளாஸ்டிக் மறுசுழற்சி, நீடித்த தன்மை குறித்த  நான்கு நாள் உலகளாவிய மாநாடு இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் தொடங்கியது. இம்மாநாட்டை மத்திய ரசாயனம், உரங்கள் அமைச்சக செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா தொடங்கி வைத்தார். மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மெர்சி எபாவோ இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் பத்து சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படும் நிலையில், மிக முக்கியமான தலைப்பில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர், ரசாயனம், பெட்ரோ ரசாயன உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆகியோரைப் பாராட்டினார். பிளாஸ்டிக் தொழில் பொருளாதாரத்திற்கும் உலக அளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.

பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும்  நோக்கில், 2016-ம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை அரசு அறிமுகப்படுத்தியதன் மூலம் மறுசுழற்சி முறையைக் கடுமையாக அமல்படுத்தி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டு தடை செய்யப்பட்டது.

மேலும், இந்தத் துறையில் தொழில்துறை ஆற்றிய முக்கியமான பங்கை அவர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு நாளும் உலக அளவில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால், விரைவில் ஒரு நிலையான சுழற்சிப் பொருளாதாரமாக மாற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மெர்சி எபாவோவும் இந்த காரணத்திற்காக குறு, சிறு, நடுத்தர தொழில்கள்  அமைச்சகத்தின் ஆதரவைக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் தொழில்துறையைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் தங்கள் துறையின் கீழ் வருவதையும் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும், அவர்களின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஹைதராபாதில் அதிநவீன ஏற்றுமதி மையத்தை அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030702

***

SMB/IR/RS/RR/DL



(Release ID: 2030816) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi