ஐஃஎப்எஸ்சி ஆணையம்
பருவநிலை நிதிக்கான நிபுணர் குழு இடைக்கால நிதி குறித்த முதல் அறிக்கையை ஐஎஃப்எஸ்சிஏ-விடம் சமர்ப்பித்தது
Posted On:
02 JUL 2024 9:49PM by PIB Chennai
பருவநிலை நிதிக்கான நிபுணர் குழு இடைக்கால நிதி குறித்த தனது முதல் அறிக்கையை சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய (ஐஎஃப்எஸ்சிஏ-IFSCA) தலைவர் திரு கே. ராஜாராமனிடம் நேற்று சமர்ப்பித்தது.
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 டிசம்பர் 9 அன்று ஐஎஃப்எஸ்சி முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களிடையே உரையாற்றுகையில், நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைய இந்தியாவுக்கு குறைந்தது 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும், இதற்கு உலகளாவிய ஆதாரங்களில் இருந்து நிதியுதவி அவசியம் என்றும் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து 2023 டிசம்பர் 21 அன்று ஐஎஃப்எஸ்சிஏ-வால் பருவநிலை நிதிக்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. எரிசக்தி, சுற்றுச்சூழல், தொழில்துறை மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிபுணர்களை இந்தக்குழு உள்ளடக்கியது.
இந்த குழு மூன்று பிரிவுகளில் அறிக்கையை வழங்கியுள்ளது.
1. இடைநிலை நிதியின் நோக்கம் மற்றும் வரையறை,
2. கொள்கை மற்றும் ஒழுங்குமுறை,
3. நிதி மற்றும் அதற்கான ஆதாரம்
இந்த அறிக்கையின் அடிப்படையில் இடைக்கால நிதிக்கான கட்டமைப்புக்கான பணிகளை ஐஎஃப்எஸ்சிஏ தொடங்கும்.
இந்த அறிக்கை மற்றும் நிபுணர் குழுவின் விரிவான பரிந்துரைகளை ஐஎஃப்எஸ்சிஏ-வின் https://shorturl.at/EqhIG என்ற இணையதளத்தில் காணலாம்.
***
PLM/AG/KV
(Release ID: 2030361)
Visitor Counter : 57