மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் (கிரேடு 'பி') துறைசார் போட்டித் தேர்வு, 2023-ன் இறுதி முடிவுகளை வெளியிட்டது

Posted On: 02 JUL 2024 4:16PM by PIB Chennai

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகளின் (கிரேடு 'பி') துறைசார் எழுத்துப் போட்டித் தேர்வின்  முடிவுகள், 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சேவைப் பதிவேடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில்பரிந்துரைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்திய செயலகப்பணி, ரயில்வே வாரிய செயலகப்பணி, நுண்ணறிவுப் பிரிவு, ஆயுதப்படைகள் தலைமையக குடிமைப்பணி ஆகியவற்றில் இந்த தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணிகளில் உள்ள 465 காலிப் பணியிடங்களில் 455 தேர்வர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 43 பேர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 43 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்த 369 பேர் அடங்குவர். இவர்கள் மத்திய செயலகப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே வாரிய செயலகப்பணியில் காலியாக உள்ள 16 இடங்களுக்கும் பொதுப் பிரிவில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுண்ணறிவுப் பிரிவில் காலியாக உள்ள 61 இடங்களில் 58 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்தோர் 44 பேர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 பேரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படைகள் தலைமையக குடிமைப்பணியில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கும், தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 5 பேரும், பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030231

***

PKV/AG/RR


(Release ID: 2030253) Visitor Counter : 110