பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதி பங்களாதேஷுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2024 3:45PM by PIB Chennai

இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக 2024 ஜூலை 1 முதல் 2024 ஜூலை 4 வரை பங்களாதேஷ் செல்கிறார். இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும், கடற்படை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயும் நோக்கிலும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

டாக்காவில்  பங்களாதேஷ் கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் நஸ்முல் ஹசனுடன் திரு தினேஷ் திரிபாதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.  4 ஜூலை 2024 அன்று சிட்டகாங்கில் உள்ள பங்களாதேஷ் கடற்படை அகாடமியில் நடைபெறும் பயிற்சி நிறைவு அணிவகுப்பையும் அவர் பார்வையிடவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, கடற்படை தளபதி திரு திரிபாதி  பங்களாதேஷ் அரசின் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகளுடனும் இருதரப்பு பேச்சுகளை நடத்தவுள்ளார்இந்தியக் கடற்படைத் தளபதியின் இந்தப் பயணம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.

***

AD/PLM/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2029748) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP