சுரங்கங்கள் அமைச்சகம்

2024 மே மாதத்தில் சுரங்கத் துறையில் வளர்ச்சி - முக்கிய கனிமங்கள் மற்றும் அலுமினிய உலோக உற்பத்தி அதிகரிப்பு

Posted On: 28 JUN 2024 7:21PM by PIB Chennai

இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல் ஆகியவை  மொத்தக் கனிம உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் பங்களிக்கின்றன. இந்த முக்கியக் கனிமங்கள் 2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவைக் கொண்டிருந்தன.  2023-24-ம் நிதியாண்டில்்இரும்புத் தாது உற்பத்தி 275 மில்லியன் மெட்ரிக் டன், சுண்ணாம்புக் கல்  450 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

 இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2024-25ம் நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களிலும் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. இரும்புத் தாது உற்பத்தி 2023-24ம் நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் 50 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் 2024-25 ம் நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் 52 மில்லியன் மெட்ரிக் டன்னாக 4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் 77 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25ம் நிதியாண்டில் ஏப்ரல்-மே மாதங்களிர் 79 மில்லியன் மெட்ரிக் டன்னாக 2.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டின்  ஏப்ரல்-மே மாத காலத்தில், மாங்கனீஸ் தாது உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரும்பு அல்லாத உலோகத் துறையில், அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலத்தை விட 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இந்தியா உலகின் 2வதுபெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், 3வது பெரிய சுண்ணாம்புக்கல்  உற்பத்தியாளராகவும், 4வதுபெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது. 

***** 

ANU/SMB/PLM/KV

 



(Release ID: 2029509) Visitor Counter : 11


Read this release in: Telugu , English , Urdu , Hindi