நிதி அமைச்சகம்
மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் தானியங்கி அந்நியச் செலாவணி விகித முறை 2024 ஜூலை 4 முதல் அமலுக்கு வருகிறது
प्रविष्टि तिथि:
27 JUN 2024 8:49PM by PIB Chennai
தானியங்கி அந்நியச் செலாவணி விகித முறையைத் தொடங்குவதற்கான சுற்றறிக்கையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை (சிபிஐசி) வெளியிட்டுள்ளது. மனித பணிமுறையில் தற்போது இருப்பதை மாற்றி தானியங்கி முறை 2024 ஜூலை 4 முதல் அமலுக்கு வருகிறது.
22 நாடுகளின் செலாவணிகளுக்கான மாற்றும் விகிதம் இணையதளதின் மூலம் இப்போது வெளியிடப்படுவதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வணிகம் செய்வது எளிதாக இருக்கும். இந்தச் செலாவணி விகிதங்கள் மாதத்திற்கு இரண்டு முறை அதாவது மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஐஸ்கேட் (ICEGATE) இணையதளத்தில் வெளியிடப்படும். இது அடுத்த நாளில் நள்ளிரவிலிருந்து அமலுக்கு வரும்.
சிபிஐசி இணையதளத்தில் கிடைக்கும் இதற்கான இணைப்பு பயன்பாட்டாளர்களுக்கு ஐஸ்கேட் இணையதளத்திற்கு கொண்டுசெல்லும். அங்கு அந்நியச் செலாவணி மாற்று விகிதங்களைப் பார்வையிடலாம்.
***
(Release ID: 2029206)
SMB/KPG/RR
(रिलीज़ आईडी: 2029295)
आगंतुक पटल : 168