விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண் அமைச்சகம் சார்பாக புதுமையான வேளாண் மதிப்புச் சங்கிலி நிதியுதவி மூலம் இந்தியாவின் வேளாண் வணிக ஆற்றலை வெளிக்கொணர்வது குறித்த பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
27 JUN 2024 6:14PM by PIB Chennai
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஜூன் 27, 2024 அன்று புதுதில்லியில் "புதுமையான வேளாண் மதிப்புச் சங்கிலி நிதியுதவி மூலம் இந்தியாவின் வேளாண் வணிக திறனை வெளிக்கொணர்தல்" என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டு வேளாண் நிதியுதவியின் இயக்கவியல் குறித்து விவாதித்தனர்.
மதிப்புச் சங்கிலியில் வேளாண் நிதியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயலாளர் திரு மனோஜ் அஹுஜா, உற்பத்தியை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து தேவை சார்ந்த அணுகுமுறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். "வேளாண் மதிப்புச் சங்கிலிகளை இன்னும் முழுமையாக உருவாக்குவதற்கும், அவற்றை உலகளாவிய சந்தைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், விநியோக பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலிருந்து சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நமது கவனத்தை மாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார். பொறுப்பான மற்றும் டிஜிட்டல் முறைகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு அஹுஜா, அனைத்து பங்குதாரர்களுக்கும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்ய ஒரு விரிவான கொள்கை கட்டமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
வேளாண் மதிப்புச் சங்கிலி நிதியுதவி கட்டமைப்பிற்குள் சரியான நேரத்தில் கடன் வழங்குவதில் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் முக்கிய பங்கை நிதிச் சேவைகள் துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி வலியுறுத்தினார். விவசாயக் கடன் கிடைப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "மதிப்புச் சங்கிலி முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க தடையற்ற மற்றும் மலிவான கடன் அணுகலை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029147
***
(Release ID: 2029147)
PKV/BR/RR
(रिलीज़ आईडी: 2029267)
आगंतुक पटल : 126