அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எரிசக்தி மற்றும் எரிசக்தி சாதனங்கள் என்ற கருப்பொருளில் ‘ஒரு வாரம், ஒரு கருப்பொருள்’ பிரச்சாரத்தை ஏழு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள் தொடங்கின
Posted On:
27 JUN 2024 6:06PM by PIB Chennai
தில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் சென்டரில் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி முன்னிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ‘ஒரு வாரம் ஒரு கருப்பொருள்’ பிரச்சாரம் மற்றும் அதன் சின்னத்தைத் தொடங்கி வைத்த பிறகு, அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களும் அந்தந்த நிறுவனங்களில் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஜூன் 27, 2024 அன்று, 7 சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள் கருப்பொருள் அடிப்படையிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன. சி.எஸ்.ஐ.ஆர்- இன் 8 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பிரச்சாரத்தில், அனைத்து 37 ஆய்வகங்களும் குறிப்பிட்ட கருப்பொருள்களின் திட்டங்களைத் தேர்வு செய்யும்.
காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட 7 ஆய்வகங்கள் எரிசக்தி மற்றும் எரிசக்தி சாதனங்கள் என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்த வகையில் காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஹைட்ரஜன் மற்றும் பேட்டரிகள் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு ஹைட்ரஜனின் ஆற்றல் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தியது. பங்கேற்பாளர்கள் இந்தத் துறைகளில் சமீபத்திய போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றனர், நிலையான எரிசக்தி தீர்வுகள் மற்றும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தனர்.
சி.எஸ்.ஐ.ஆர்-இன் ‘ஒரு வாரம் ஒரு கருப்பொருள்’ பிரச்சாரத்தின் அடுத்த கருப்பொருளான 'ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்' 2024, ஜூலை 15 முதல் 20 வரை ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029143
***
(Release ID: 2029143)
PKV/BR/RR
(Release ID: 2029266)
Visitor Counter : 53