பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உதவி செயலாளர்களுடன் (2022 தொகுப்பு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள்) மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல்

Posted On: 27 JUN 2024 5:49PM by PIB Chennai

மத்திய அமைச்சகங்களில் பணியாற்றி வந்த உதவி செயலாளர்களின் (2022 தொகுப்பு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள்) பணிக்காலம் முடிவடைந்ததையொட்டி, அவர்களுடன் மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  புதுதில்லியில் இன்று (27.06.2024) கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகளை, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில், மோடி அரசு பதவியேற்ற பிறகு 2015-ல் இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டதாக கூறினார்.  

இதன்படி, கொள்கை வகுக்கும் நிலையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பல்வேறு அம்சங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இளம் அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பயிற்சி பெற்ற அதிகாரிகள், கொவிட் பெருந்தொற்று காலத்தில் மாவட்ட ஆட்சியாளர்களாக பணியாற்றியபோது, அவர்கள், பாதிப்பு  குறித்து அன்றாட நிலவரத்தை நம்பிக்கையுடன் மத்திய அரசுக்கு அனுப்ப முடிந்ததாகவும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029137 

--------------

MM/RS/DL


(Release ID: 2029186) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP