பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற காமன்வெல்த் உள்ளாட்சி மன்ற கூட்டமைப்பின் மூன்று நாள் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர சந்திரசேகர் குமார் பங்கேற்பு

Posted On: 27 JUN 2024 5:35PM by PIB Chennai

காமன்வெல்த் உள்ளாட்சி மன்ற கூட்டமைப்பின் மூன்று நாள் கூட்டம், இலங்கையின் கொழும்பு நகரில் 2024 ஜூன் 25- 27 வரை நடைபெற்றது.

இலங்கை பிரதமர் திரு தினேஷ் குணவர்தனா தொடங்கிவைத்த இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் கலந்துகொண்டார்.  

இந்தக் கூட்டத்தில் பிராந்திய அளவிலான அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், காமன்வெல்த் ஆசியா அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் உதவிகரமாக இருந்தது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில்  காமன்வெல்த் நாடுகளின் பெண்களுக்கான  எதிர்கால பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  “பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல்” என்பதே இந்தக் கூட்டத்தின் மையக்கருத்தாகும்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029126

***  

MM/RS/DL



(Release ID: 2029183) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP