எரிசக்தி அமைச்சகம்

"மாணவர்களுக்கான மின்சாரப் பாதுகாப்பு கையேடு" வெளியிடப்பட்டது

Posted On: 27 JUN 2024 1:35PM by PIB Chennai

மத்திய மின்சார அமைச்சகத்தின், மத்திய மின்சார ஆணையம், மின்சாரப் பாதுகாப்புக்கான தேசிய பொறியாளர்கள் கூட்டமைப்புடன்  இணைந்து, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆதரவுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஜூன் 26-ந் தேதி ஏற்பாடு செய்தது. அன்றைய தினம் "மின்சாரப் பாதுகாப்பு தினமாக" அனுசரிக்கப்பட்டது.

அடுத்த வாரம் தேசிய மின்சாரப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கருப்பொருள் "பள்ளியிலிருந்து பாதுகாப்பு தொடங்குகிறது" என்பதாகும்.

மின்சார பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், தேசிய மின்சாரப் பயிற்சி நிறுவனம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் சம்பந்தப்பட்ட துறையினர், தில்லியின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களிடையே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு கன்ஷ்யாம் பிரசாத் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பொது மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். பள்ளிகளில் மின்சாரப் பாதுகாப்பு அறிவு மற்றும் நடைமுறைகளின் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிப்புமிக்க வளமாக செயல்படக்கூடிய மின்சார பாதுகாப்புக்கான தேசிய பொறியாளர்கள் கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட மாணவர்களுக்கான மின்சாரப் பாதுகாப்பு கையேட்டை என்ற கையேட்டை தலைமை விருந்தினர் திரு. கன்ஷ்யாம் பிரசாத் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தினார். அடிப்படை மின்சாரக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது முதல் சாத்தியமான ஆபத்துகளை அடையாளம் காண்பது மற்றும் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது வரை, இந்தக் கையேடு பரந்த அளவிலான அத்தியாவசிய தலைப்புகளை அணுகக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய முறையில் உள்ளடக்கியுள்ளது.

***

PKV/RR/KV



(Release ID: 2029123) Visitor Counter : 54


Read this release in: Hindi , Hindi_MP , Urdu , English